பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில்உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும்.
ஓம் கீலீம் ஷெளம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸர்வ செளபாக்கியம் தேகி அருள் ஆனந்த ரூபி நாராயனி மமவஸம் குரு குரு ஸ்வாஹா இந்தமந்திரத்தை 1008 வீதம் 45 தினம் ஜெபம் செயய வேன்டும் சந்தான செளபாக்கிய யட்சிணி தேவி சித்துஆகும்
ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ -------------------------------------------------------------------------------------
மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம: -------------------------------------------------------------------------------------
கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.
துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்
விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
தரணி கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் காந்தி ஸமப்ரதம் குமாரம் சக்தி ஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாம்யஹம். -------------------------------------------------------------------------------------
தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.
கும்ப ராசி: கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம: -------------------------------------------------------------------------------------
மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.
ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு திதியிலும் ஜாதகத்தில் இரண்டு வீடுகள் சூன்யம் அடையும் அந்த வீட்டிற்கான பலன்கள் திருப்திகரமாக சரிவர அமையாது.
உதாரணமாக 7ஆம் வீடு திதி சூன்யம் அடைந்தால் ,நல்ல படிப்பு,வீடு,அழகு எல்லாம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும் அல்லது நல்ல கணவன் மனைவி அமையாது கஷ்டம் ஏற்படும்.தொழில் சார்ந்த பார்ட்னர்கள் சரிவர அமையாமல் ஏமாற்றப்படலாம். இப்படி,எந்த வீடு நம் ஜாதகத்தில் சூன்யம் அடைகிறதோ அதன் பலன் நமக்குப் பூரணமாகக் கிடைக்காது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பிறந்த திதியில் சூன்யம் அடையும் கிரகங்களால் உண்டாகும் தீமைகளில் இருந்து திதி சூன்ய பரிகாரம் என்று சொல்லப்படும் அந்தந்தத் திதிகளுக்குண்டான திதி நித்யா தேவதைகளை வழிபட்டு வருவதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பாவத்திற்கான கிரகங்கள் செயல்படத் தொடங்கி நலம் தரும்.
(1) காலை குளித்ததும் சிறுது கல் உப்பு எடுத்து தலையை வலது புறமாய் 24 முறை சுற்றி பின்பு அதை வாசலில் எறிந்து விட்டு, மீண்டும் வீட்டில் வந்து சிறுது கல் உப்பை பேப்பரில் எடுத்து தங்களின் பர்சில் வைத்திருக்கவும். இது ஒரே ஒரு முறை செய்ய வேண்டிய பரிகாரம். வேலை கிடைத்ததும் அந்த உப்பை தூர எறிந்து விடலாம்.
வேறு முறை : புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சை எடுத்து 13 முறை தலையை சுற்றி பின்பு அதை 4 துண்டாக வெட்டி நான்கு தெருக்கள் இணையும் இடத்தில் திக்கிற்கு ஒன்றாக எறிந்து விடவும். இது தொடர்ந்து முதல் நாள் செய்த அதே நேரத்தில் 7 நாட்கள் செய்ய வேண்டும். இது வேலை இல்லாதவரின் எதிர் மறை சக்திகளை அழித்து தடைகள் நீங்க வழி செய்யும்
(1) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது.
(2)காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்
(3) இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்
(4) வீட்டை சுற்றி நீரோட்டங்கள்இருந்தாலோ செயற்கையாகஅமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்
(5) காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்
(6) சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
(7) துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்
எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.
வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு
1. சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் அல்லது பாத்திரத்தில் பச்சை பாசிப்பருப்பை நிரப்பி ஓடும் நீரோடையில் விடவும். சுத்தமான நீரோடையாக இருக்க வேண்டும்.
2. வலது கையில் வெள்ளி வளையம் அணியவும். ஆஞ்சநேய வழிபாடு செய்யவும்.
3. உப்பு,சக்கரை,கடலை பருப்பு,சுத்தமான நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோவில் மடப்பள்ளியில் தானம் செய்யவும்.
4. காய்ச்சாத பசும் பாலை ஆலமரத்திற்கு 7 நாட்கள் ஊற்றி வரவும்-முடிந்த அளவு.
5. குளிக்கும் போது கெட்டி தயிர் சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும்-7 நாட்கள் மட்டும்.
கடன் தொல்லை :
1. தோலால் ஆன செருப்பு,பெல்ட் மற்றும் பர்ஸ் உபயோகத்தை நிறுத்தவும். 2. தொடர்ந்து 16 நாட்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செய்யவும். 3. முதல் நாள் நீரில் ஊர வைத்த முழு பயத்தம் பருப்பை மறு நாள் புறாக்களுக்கு இட்டு வரவும். முடியும் போதெல்லாம் செய்யலாம். 4. ஏதேனும் மலரை சுத்தமான நீரோடையில் தொடர்ந்து 43 நாட்கள் இட்டு வரவும். 5. தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டினுள் தெளித்து வரவும். 6. முடியும் போதெல்லாம் 11 பால் பாக்கெட்டுகள் கோவிலுக்கு கொடுத்து வரவும்
மாந்திரீக சக்தி மூலம் நாம் 1.வசியம் 2. மோகனம் 3. ஆகர்சணம் 4. தம்பனம் 5. பேதனம் 6. வித்வேசணம் 7. உச்சாடனம் 8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம். மந்திரங்கள்
வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா. இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.
மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா. இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல். தம்பனம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா. இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.
உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா. இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.
மாரணம் - ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா. இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.
மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அமரும் ஆசனம் எந்த மரத்தின் பலகையால் அமைந்திருப்பது சிறப்பானதாக இருக்கும் என்று புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார். பலா பலகை - தம்பனம் மாம் பலகை - மோகம் வில்வம் - வசியம் பேய்த்தேத்தான் - பேதனம் எட்டிப்பலகை - வித்துவேடணம் அத்திப்பலகை - மாரணம் வெண்நாவல் - ஆக்ருசணம் வெப்பாலை - உச்சாடனம்.
இதே வகையில் மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும் போது பூஜைக்கு பயன் படுத்த வேண்டிய மலர்களைப் பற்றி புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு வகைப்படுத்துகிறார். மல்லிகை - வசியம் முல்லை - மோகனம் தும்பை - உச்சாடனம் அரளி - ஆக்ருசணம் காக்கனமலர் - வித்துவேடணம் ஊமத்தம் - பேதனம் கடலைமலர் - மாரணம் தாமரை - தம்பனம் இறுதியாக மாந்திரீக பயிற்சியின் போது அதனை செய்பவர்கள் அணிவதுடன் செய்யும் மூலங்களை அலங்கரிக்க வேண்டிய ஆடை வகைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் புலிப்பாணிச்சித்தர்.
செம்பட்டு - வசியம் மஞ்சள் பட்டு - மோகனம் பச்சைப்பட்டு - தம்பனம் வெள்ளைப் பட்டு - பேதனம் கழுதைவண்ணப்பட்டு - வித்துவேடணம் பஞ்சவர்ணபட்டு - உச்சாடனம் ஆந்தைவண்ணப்பட்டு - ஆக்ருசணம் கருப்பு வண்ணப்பட்டு - மாரணம். சித்தர்கள் அருளிய மாந்திரிகத்தின் எட்டு நிலைகளைப் பற்றியும், அதன் மூல மந்திரங்களைப் பற்றியும், அந்த மந்திர உபாசனைகளை துவங்கிட வேண்டிய நாள் பற்றியும் முந்தைய பதிவில் பார்த்தோம்.
அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அமர வேண்டிய திசை, உடலில் அணிய வேண்டிய மாலைகள், செபிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய மாலைகள் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.
கிழக்கு - இந்திரன் - தம்பனம் தென்கிழக்கு - அக்கினி - மோகனம் தெற்கு - எமன் - மாரணம் தென்மேற்கு - நிருதி - உச்சாடனம் மேற்கு - வருணன் - ஆக்ருசணம் வடமேற்கு - வாயுதேவன் - வித்வேடணம் வடக்கு - குபேரன் - பேதனம் வடகிழக்கு - ஈசன் - வசியம் இதைப் போலவே மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அணிய வேணிய மாலைகளையே ஜெபம் செய்யும் போது பயப்படுத்த வேண்டும். மாந்திரிக நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுபடும் என்றும் அது பற்றிய தகவல்களை புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். உருத்திராட்சம் - வசியமாகும் மிளகுமணி - மோகனந்தான் துளசிமணி - உச்சாடனம் தாமரைமணி - தம்பனம் நாகமணி - மாரணம் சங்குமணி - ஆக்ருசணம் எட்டிமணி - வித்துவேடணம் வெண்முத்து - பேதனம்
இப்படி பெறப்பட்ட இந்த மூல மந்திரங்களை குறிப்பிட்ட நாளில்தான் உச்சாடனம் செய்திட துவங்க வேண்டுமாம். இதைப் பற்றி புலிப்பாணி சித்தர் பின்வருமாறு கூறுகிறார்.
ஞாயிறு - வசியம் மற்றும் பேதனம் திங்கள் - தம்பனம் செவ்வாய் - மோகனம் புதன் - மாரணம் வியாழன் - உச்சாடனம் வெள்ளி - ஆக்ருசணம்
சனி - வித்துவேடணம்
அஷ்ட கர்ம பெயர் கிழமைகள்
1. வசியம் - ஞாயறு
2. தம்பனம் - புதன்
3. மோகனம் - திங்கள்
4. உச்சாடனம் - வியாழன்
5. பேதனம் - செவ்வாய்
6. ஆகர்ஷணம் - வெள்ளி
7. வித்வேஷனம் - செவ்வாய்
8. மாரணம் - சனி
மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.
முதலில் மந்திரத்திற்குரிய தேவதையிற்கு மலர், தூப, தீப, நைவேத்திய ஆராதனை செய்த பின்னர் மந்திரங்களை உருக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். உரிய எண்ணிக்கை உருக் கொடுத்த பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி பூசையினை நிறைவு செய்ய வேண்டும். உருக் கொடுக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக் கொள்ள கை விரல்களின் கணுக்களை கொண்டு கணிக்கலாம் அல்லது உரிய ஜெப மாலையை உபயோகிக்கலாம். ஜெப மாலைகள் மந்திரத்தின் தன்மைக்கேற்ப ருத்திராட்சம், ஸ்படிகம், மிளகு, தாமரைக் கொட்டை, துளசி என மாறுபடும். ஜெப மாலையின் மணியின் எண்ணிக்கை 108 உடையதாக இருக்க வேண்டும்.
மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு சாதனமாகும். மந்திரங்கள் நம் எண்ணங்களை வலுப்படுத்தி, ஆற்றலை வளர்த்து, மனச் சஞ்சலத்தைக் குறைத்து, மனதை அமைதிப் படுத்தி நம்மிடத்து நல்ல எண்ணங்களை வளர்க்கும் ஆற்றல்பெற்றவை. மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், {உடல், மனம், ஆன்மா} மூன்றையும் அந்த மந்திரத்தில் அந்த மந்திரத்திற்கு உரிய தெய்வத்தில், அல்லது தேவதையில் நிலைநிறுத்தி உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் போது உரிய விரிப்பில் (, உரிய மரப்பலகைகள், பட்டுத் துணி, தர்ப்பை, வெள்ளை வஸ்த்திரம்) அமர்ந்து உச்சரிக்க வேண்டும். கண்டிப்பாக வெறும் தரையில் அமர்ந்து மந்திர உச்சாடணம் செய்யக் கூடாது.
அதிகாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையான பிரம்ம முகூர்த்தத்தில் மந்திர உச்சாடனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.அப்படி முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அந்த நேரத்திற்கே மந்திர உச்சாடணம் செய்ய வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் போது, 1. சத்தமாக, 2. உதடு மட்டும் அசைந்து, 3. சத்தமே வராமல் மனதிற்குள் என உச்சரிக்கலாம் இதில் மூன்றாவதாக சொன்ன முறையிலேயே அதிக பலன் உள்ளது.
அதாவது உதடு, நாக்கு அசையாமல் மந்திரத்தினை மனதிற்குள்ளேயே உச்சரிக்க வேண்டும். மந்திரத்தின் தன்மைக்கேற்ப திசையினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஞான மந்திரங்கள் வடக்கு நோக்கியும், இல்வாழ்விற்குரியன கிழக்கு நோக்கியும், மாரண மந்திரங்கள் தெற்கு நோக்கியும் அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு. குறைந்த பட்சம் மந்திரங்களை 108 முறை அவசரம் காட்டாது உச்சரிக்க வேண்டும். மனதிற்குள்ளேயே நாவசையாமல் உச்சரிப்பவர்கள் 54, 27 முறை உச்சரிக்கலாம். 16 தடவைக்கு குறையாமல் உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும்.
பூசை அறை சிறப்பானதாக இருக்க வேண்டும். பூசை அறையில் நல்ல நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நறுமணம் பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது. யட்சிணி, மோகினி போன்ற தேவதைகளிற்கு மல்லிகை மணம் பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு.
அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு, தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணி புகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால் சாம்பிராணி தூபம் உபயோகிப்பது சிறப்பானது. பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும். மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது சாத்வீக மந்திரங்களாக இருப்பது நல்லது. அகோர மந்திரங்கள் முறைப்படி வழிபாடு செய்யாவிட்டால் நமக்கு எதிர்விளைவுகளைக் கொடுத்து விட வாய்ப்புள்ளது.
அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
வீரபத்திரரின் பீஜ மந்திரமான "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் வீரபத்திரர் வீரமாய் துணை வருவார் எகிறார் அகத்தியர்.
இதில் மந்திரம் என்பது - "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்
2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.
3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது.
4. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.
5. இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.
6. பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம். அதுவும் ராஜ அலங்காரம், அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும். இதை எடுத்துவிட்டு ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும்.
7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும். இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.
8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.
9. படத்திற்க்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.
10. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
11. திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க வேண்டும்.
12. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.
13. வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும். அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டகூடாது.
14. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.
இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். அப்போதுதான் அருள்செல்வம் முதலில் வரும். அப்புறம்தான் பொருள்செல்வம். ஓம் அகத்தீசாய நம! ஓம் கரூவூர்தேவாய நம! ஓம் போகதேவாய நம! ஓம் கோரக்கதேவாய நம!